குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்

சேந்தமங்கலம், மார்ச் 17: சேந்தமங்கலம் பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மளிகை கடை, டீக்கடை, ஹோட்டல் கடையில் வாங்கி வீட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் தலைமையில், சேந்தமங்கலம் எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார், சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த கீதா, சாலையூர் பகுதியை சேர்ந்த சேகர், நைனாமலை அடிவாரப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகியோர் மகளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 மளிகை கடைகளுக்கும் சீல் வைத்து அபராதம் விதித்தனர். மற்ற கடைகளுக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற கூடாது என
எச்சரித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்