குட்கா விற்பனை செய்த பேன்சி ஸ்டோருக்கு சீல்

காரிமங்கலம், ஜூலை 16: காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேன்சி ஸ்டோரை பூட்டி சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரி, கடை உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தார். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அதிகாரிகள், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரியாம்பட்டி காமராஜ் நகரில், பேன்சி ஸ்டோர் ஒன்றில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பேன்சி ஸ்டோரை பூட்டி சீல் வைத்தனர். மேலும், கடை உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மறு உத்தரவு வரும்வரை கடையை திறக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி