குட்கா, புகையிலை விற்ற 191 கடைக்கு சீல் வைப்பு

சேலம், ஆக. 14: சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 191 கடைகளுக்கு சீல் வைத்தனர். சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் போலீசாருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட, மாநகர போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா ,புகையிலை பொருட்களை விற்ற 400க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து குட்கா விற்கும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து, ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சேலம் உணவு பாதுகாப்பு துறையினர் 1699 கடைகளில் நடத்திய சோதனையில், குட்கா, புகையிலை விற்ற 191 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். அந்த கடைகளில் இருந்து 800 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து