குடோனில் பதுக்கிய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-உரிமையாளர் கைது

பாலக்காடு : பாலக்காட்டில் கலால்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குடோனில் விற்பனைக்காக பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (38). இவர் பாலக்காட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பாலக்காடு பெரியகடைவீதி வித்துண்ணி-நூரணி சாலையில் கடை மற்றும் குடோன் உள்ளது. இவர், குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கலால் துறை சிறப்புப்படை அதிகாரி சவுகத்தலி தலைமையில் அதிகாரிகள் குடோனில் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக குடோன் உரிமையாளர் ரமேஷ்குமார் (44) என்பவரிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி கேரளாவிற்கு கடத்தி வந்து இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமாரை கைது செய்த அதிகாரிகள், 200 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்