குடும்ப பிரச்னை தகராறில் தங்கை கணவர் வீட்டில் இளம் பெண் மர்மச்சாவு: கொளத்தூரில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை பொன்னியம்மன்மேடு வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மனைவி மற்றும் மஞ்சு (20), சரண்யா  (19) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், சரண்யாவுக்கும்,  கொளத்தூர் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும்  சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  கருத்து வேறுபாடு காரணமாக  தம்பதி இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சரண்யா சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு சென்ற கார்த்திக் அங்கிருந்த  மஞ்சுவிடம், உனது தங்கை என்னிடம் அடிக்கடி சண்டை போடுகிறாள். அவளுக்கு புத்திமதி கூறி என்னுடன் அனுப்பி வையுங்கள் என  கூறியுள்ளார். இதனால் மஞ்சுவுக்கும் கார்த்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கார்த்திக், மஞ்சுவை அடித்துவிட்டு, என்னுடைய வீட்டில் இருக்கும் உனது தங்கையின் துணிமணிகளை எடுத்து செல் என கூறியுள்ளார். அதன்படி அங்கு சென்ற மஞ்சு,  தங்கையின் துணிமணி, பொருட்களை எடுத்துள்ளார். அப்போது மஞ்சுவுக்கும், கார்த்திக்குக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மஞ்சுவை சரமாரி தாக்கிவிட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மஞ்சு, யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் வீட்டில் தூக்குப்போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்துபார்த்தபோது மஞ்சு மின்விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர், மஞ்சுவின சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தங்கையின் கணவர் வீட்டில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்