குடியிருப்பு வழியாக மின்கம்பி கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு-கிராம மக்கள் போராட்டம்

கடையம் : கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள் நாடானூர் குடியிருப்பு வழியாக தீர்த்தாரப்பபுரத்தில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷருக்கு உயரழுத்த மின்கம்பி கொண்டு செல்லும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை அணைந்தபெருமாள் நாடானூர் கிராம மக்கள் மின்வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு வழியாக உயரழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்வதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் நடக்கிறது. இதனை உடனே நிறுத்தாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர். தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி எஸ்ஐக்கள் முத்துக்கிருஷ்ணன், காமராஜ் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குடியிருப்பு வழியாக மின்கம்பிகள் கொண்டு செல்லும் பணியை நிறுத்துவதாக தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி