குடியிருப்பு பகுதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையால் பாதிப்பு: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு

 

தஞ்சாவூர், ஆக.9: தஞ்சாவூரில் உணவுப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை எழுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் செய்தனர். தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு, எஸ்.என்.எம். நகர்வாசிகள் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் கீழவாசல் டபீர் குளம் ரோடு, எஸ்.என்.எம். நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உணவு பொருள் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அதிகாலை 5 மணி முதல் இயங்கும் இத் தொழிற்சாலையில் இருந்து கரும்புகையும், மிளகாய் காரம் உள்ளிட்டவைகள் காற்றில் பரவுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், தும்மல், இருமல், கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலையில் அடுப்பு எரிக்க மூட்டை மூட்டையாக மரத்தூள் கொண்டுவரப்படுவதால் காற்றில் பறந்து வீடுகளில் உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவைகளில் மரத்தூள் பரவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே உடனே இந்நிறுவனத்தை மக்கள் வசிக்கும் இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது