குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசம் காட்டு யானைகளை விரட்டக் கோரி பொதுமக்கள் போராட முயற்சி-வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா சுற்றுவட்டாரம் பகுதியில்  குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்டக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.   தேவாலா சுற்றுவட்டாரம் பகுதிகளான  பாண்டியார் டேன்டீ, கைதகொல்லி,தேவாலா அட்டி,பொன்வயல்,வாளவயல்,  கோட்டவயல்,தேவாலா,க ரியசோலை, தேவாலா  டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் 2 காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை சேதம் செய்வது, விவசாய  பயிர்களை சேதம் செய்வது, பொதுமக்களை பார்த்தால் ஆக்ரோசத்துடன் துரத்தி  தாக்குவதற்கு ஆகிய அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தன. இதனால் யானைகளை அட வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு  வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம்  தொழிலாளர்கள் சில நாட்கள் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்  வனத்துறையினர் மற்றும்  அரசு அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். இதன் பின்னர் முதுமலையில் இருந்து வனத்துறை சார்பில்  ஜான், வில்சன், உதயன்  ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கடந்த பல நாட்களாக காட்டு யானைகளை விரட்டும் பணி நடந்தது.  ஆனால் காட்டு யானைகள் மீண்டும்,  மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் வனத்துறையினர் திணறி வருகின்றனர். ஜான் என்ற கும்கி யானைக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக முதுமலைக்கு  அனுப்பி வைத்தனர். வில்சன் என்ற கும்கி யானைக்கு மதம்பிடித்து பாகனை கீழே  தள்ளி தாக்க முயற்சித்ததால் வன உயிரின மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர்.இதையடுது–்து வனத்துறையினர் யானை வில்சனை லாரியில் ஏற்றி நேற்று முதுமலைக்கு கொண்டு சென்றனர். உதயன் என்ற யானை மட்டும் தற்போது களத்தில் இருப்பதால் காட்டு யானையை கண்காணித்து குடியிருப்பிலிருந்து வனப்பகுதிக்குள்  விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  பொதுமக்கள் தேவாலா பஜாரில் போராட்டம் நடத்த நேற்று முயற்சித்தனர். இத்தகவலறிந்த தேவாலா போலீசார், வனத்துறையினர் சம்வயிடம் சென்று மக்களிடம் பேசினர். அப்போது இன்னும் இரண்டு நாட்களில் பொதுமக்களை  யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்டுவதாக, தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் கூடலூர் வனக்கோட்ட அதிகாரியிடம் மனு கொடுத்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போவதாக தெரிவித்து கலைந்து சென்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்