குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், ஜன. 29: விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் குடியரசு தினத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற சட்ட விதிறை மீறி பணிக்கு அமர்த்திய 39 கடைகள், 52 உணவு நிறுவனங்கள், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்