குடிமராமத்து பணி ரகசிய பணி கிடையாது!: தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையத்தில் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி விவரங்களை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்வதால் ஊழல் குறைய வாய்ப்புள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பு நிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தமிழகத்தில் குடிமராமத்து பணிக்காக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 2019ம் ஆண்டு 110 விதியின் கீழ் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு 1000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பெய்த மழையில் குடிமராமத்து பணிகள் நடைபெற்ற குளங்கள், ஏரிகள் முழுமையாக நிரம்பப்படவில்லை. எனவே இதில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளது. அதேபோல இந்த பணிகளுக்கான விவரங்களை அரசு அதிகாரிகள் தவிர, பொதுமக்கள் யாரும் தெரிந்துகொள்ள முடியவில்லை. குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் அனைத்து தரப்பு பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அச்சமயம் குடிமராமத்து பணிகள் என்பது ரகசிய பணிகள் கிடையாது. குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருந்து அனைத்து மக்களும் தெரிந்துகொள்வதால் அதில் ஊழல் நடைபெறும் வாய்ப்பு குறையும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தமிழகத்தில் நடைபெறும் முழு குடிமராமத்து பணி விவரங்களை புதிய இணையதளம் தொடங்கி 12 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பணியின் விவரம், ஒப்பந்ததாரர்களின் பெயர், கால அளவு, செலவீடு தொகை, பணியின் தற்போதைய நிலை, பபணி ஆரம்பிக்கும் போது எடுத்த புகைப்படம், பணி முடிந்த போது எடுத்த புகைப்படம் உள்ளிட்ட முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்….

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்