குடிமராமத்து பணியை ஆயக்கட்டுதாரர்களிடம் வழங்க கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த சின்னையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா புன்னங்குடியில் கூடணி கண்மாய், புது கண்மாய் மற்றும் பெரிய கண்மாய் உள்ளன. இவற்றின் குடிமராமத்து பணிக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனி நபர்களைக் கொண்ட நீரினை பயன்படுத்துவோர் கூட்டமைப்பு சார்பில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது.குடிமராமத்து பணிகளை அந்தந்த கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். எனவே, ஆயக்கட்டுதாரர்கள் மூலமே குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலர், சிவகங்கை கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு: 2,500 விநியோகம் தொடங்கியது: நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஆளுங்கட்சியினர் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுசென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 பணம் வழங்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 அரிசி அட்டை வைத்துள்ள 2 கோடியே 10 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக தமிழக அரசு ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. பொதுமக்களுக்கு 4ம் தேதி (நேற்று) முதல் 12ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அதன்படி, இந்த பணி நேற்று காலை 8.30 மணி முதல் தொடங்கியது. ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டதால் ரேஷன் கடைகளில் தள்ளுமுள்ளு இல்லை. ஒரு நாளைக்கு 200 பேருக்கு வழங்கப்பட்டது. தலா ரூ.2,500, ஐந்து 500 ரூபாய் புது நோட்டாக வழங்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை, முந்திரி, கரும்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படும்போது, ஆளுங்கட்சியினர் குறுக்கீடு எதுவும் இருக்கக்கூடாது என்றும், ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று நீதிமன்றமும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி இருந்தன. ஆனால் இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளிலும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களே பொங்கல் பரிசு திட்டத்தை பொதுமக்களுக்கு வழங்கி புகைப்படம் எடுத்து தொடங்கி வைத்தனர்.  கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பொங்கல் பணம் வாங்க வந்த பொதுமக்களிடம் செல்போன் எண்களை அதிமுகவினர் வாங்கிக் கொண்டு, அதன்பிறகே தலா ரூ.2,500 பணம், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால், பொதுமக்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினரும் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தனர். 12ம் தேதி வரை வாங்காதவர்கள், 13ம் தேதி பெற்று கொள்ளலாம். பொங்கல் முடிந்த பிறகும் ரொக்கப்பணம் ரூ.2,500 பெறலாம் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்….

Related posts

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு