குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம்

காரிமங்கலம், மே 9: காரிமங்கலம் பிடிஓ அலுவலகத்தில், குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். ஊராட்சி உதவி இயக்குனர் மணிவாசகம் தலைமை வகித்து, கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் சீரான முறையில் இருக்க, ஊராட்சி நிர்வாகம் கண்காணிப்புடன் செயல்பட கேட்டுக் கொண்டார். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காமல் தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் எடுக்க வேண்டும், மேலும் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் தேவை இல்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை