குடிநீர் திட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி

சாயல்குடி, செப்.23: கடலாடி யூனியனில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கடலாடி ஒன்றியத்தில் 60 பஞ்சாயத்துகள் உள்ளன. கடலாடி யூனியன் அலுவலகத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி மண்டல வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்களுக்கு வெளிவளாக பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பிடிஓ ராஜா தலைமை வகித்தார். துணை வட்sடார வளர்ச்சி அலுவலர்கள் வீரபாண்டி, ஆனந்தகுமார், பிரியா முன்னிலை வகித்தனர்.

முகாமில், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து மண்டல வளர்ச்சி அலுவலர்கள் விளக்கினர். மேலும் 2023-24 நிதி ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகள், கிராமங்கள், உட்கடை கிராமங்கள், வீடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விபரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முகாமில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டது. அலுவலர் முருகன் நன்றி கூறினார். இப்பயிற்சி முகாமில் பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு