குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த நாகப் பாம்பு

திருவெண்ணெய்நல்லூர், மே 30: திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் நாக பாம்பு இறந்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள அய்யனார் கோயில் அருகே உள்ள குடிநீர் கிணற்றில், நாகப்பாம்பு இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. இது தெரியாமல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மக்கள் பாம்பின் விஷம் நீரில் கலந்து இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட குடிநீர் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி அழுகிய நிலையில் இருந்த நாகப் பாம்பை அகற்றி கிணற்றை சுத்தம் செய்தனர். சுகாதாரமான குடிநீர் வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை