குடிநீர், கழிவுநீர் பிரச்னைகளுக்கு இன்று குறைதீர் கூட்டம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, மே 13: குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை), குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாதத்தின் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறைதீர் கூட்டம் நடைபெறும் இடம் அலுவலகங்கள்
பகுதி அலுவலகம்-1 திருவொற்றியூர்
பகுதி அலுவலகம்-2 மணலி
பகுதி அலுவலகம்-3 மாதவரம்
பகுதி அலுவலகம்-4 தண்டையார்பேட்டை
பகுதி அலுவலகம்-5 ராயபுரம்
பகுதி அலுவலகம்-6 திரு.வி.க.நகர்
பகுதி அலுவலகம்-7 அம்பத்தூர்
பகுதி அலுவலகம்-8 அண்ணா நகர்
பகுதி அலுவலகம்-9 தேனாம்பேட்டை
பகுதி அலுவலகம்-10 கோடம்பாக்கம்
பகுதி அலுவலகம்-11 வளசரவாக்கம்
பகுதி அலுவலகம்-12 ஆலந்தூர்
பகுதி அலுவலகம்-13 அடையாறு
பகுதி அலுவலகம்-14 பெருங்குடி
பகுதி அலுவலகம்-15 சோழிங்கநல்லூர்

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை