குடிநீரை கொதிக்க வைத்து பருகுங்கள் நகராட்சி தலைவர் வேண்டுகோள்

 

பழநி, செப். 4: கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பழநி நகராட்சி சார்பில் குடிநீரின் தரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் 6 மேல்நிலை தொட்டிகள் பாலாறு, பொருந்தலாறு மற்றும் கோடைகால நீர்த்தேக்க சுத்தகரிப்பு நிலையம் பிரதானக்குழாய் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் அனைத்து குழாய்களில் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.ஐ தரம் உள்ளதாகவும் 32% குளோரின் அளவு கண்டிப்பாக உள்ளதா என நகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதியை குறைந்தபட்ச குளோரின் அளவான 0.2 பி.பி.எம். இருக்குமாறு குளோரினேசன் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, காய்ச்சல் போன்ற குடிநீர் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டுமென பழநி நகராட்சித்தலைவர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்