குடித்துவிட்டு மகன் தொல்லை தாய் தற்கொலை

பெரம்பூர்: கொளத்தூர் கணேஷ் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (50). பியூட்டி பார்லர் நடத்தினார். இவரது மகன்கள் ராஜேஷ்வர் (30), விக்னேஷ்வர் (25). இளைய மகன் விக்னேஷ்வர் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ராஜேஷ்வர் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 23ம் தேதி ராஜேஷ்வர் மது அருந்திவிட்டு தாயுடன் சண்டை போட்டுள்ளார். மனம் அடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்த 44 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி உயிரிழந்தார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு