குடவாசல் வட்டார வள மையத்தில் 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி

 

வலங்கைமான், ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்வு சம்பந்தமான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாணவர்களின் திறன் அடிப்படையில் கற்றல் கற்பித்தலில் மேம்பாடு அடையவும், மேலும் மாணவ, மாணவிகள் அரசு சார்பாக நடைபெறும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வட்டார அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப் பயிற்சியை மாவட்ட அளவில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு சுமார் 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.இப்பயிற்சியை குடவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் குமரேசன், ஜெயலக்ஷ்மி மற்றும் குடவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூபாலன் ஆசிரியப் பயிற்றுநர்கள்ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்கள்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்