குடவாசல் அருகே வல்லம் அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா

திருவாரூர், மே 26: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வல்லம் அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வல்லம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் இருந்து வருகிறது. ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் உபயதாரர்கள் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற்றதையடுத்து மகா கும்பாபிஷேகமானது நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்கி நேற்று காலை வரையில் 2 கால பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் காலை 9.45 மணி அளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று விமானம், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சிவாச்சாரியார் மூலம் புனித நீர் ஊற்றப்பட்ட நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்