குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, அக். 4: சென்னை டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவு அமைப்பு இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், நேற்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பை புறக்கணித்து, வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் விஜயராகவன் தலைமை வகித்தார். சிபிஎஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கில்ஸ் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 1.6.2009 தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். தேர்தல் வாக்குறுதி எண்ணான 311ல் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் வட்டார அமைப்பாளர்கள் தினேஷ்குமார், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாலாஜி கேசவன் நன்றி கூறினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு