குஜராத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து : 7 பேர் படுகாயம்… பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் வதோதராவில் ரசாயண தொழிற்சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் தொழிற்சாலையே எரிந்து பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். தீபக் நிட்டிரே என்ற ரசாயன தொழிற்சாலையில் பயங்கரமான இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடிப்பது போன்று தீப்பிழம்புகளை கக்கியபடி எழுந்த புகையால் அந்த பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பது போன்ற சத்தத்தில் நெருப்பு பிழம்பு வெளியேறியது. காற்றில் ரசாயணம் கலந்ததால் மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க அருகாமையில் இருந்த சுமார் 700 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான போராட்டத்தை மேற்கொண்டனர். வெடி விபத்தால் வானில் எழும்பிய புகை மற்றும் நெருப்பை 10 கிமீ தூரத்தில் உள்ளவர்களாலும் பார்க்க முடிந்தது. இந்த விபத்தில் எந்த தொழிலாளரும் உயிரிழக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. என்றாலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரசாயணம் மற்றும் தொழிற்சாலை எரிந்து பெரும் பொருட் செலவை ஏற்படுத்தியுள்ளது.  …

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்: சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு