குஜராத் குண்டுவெடிப்பில் 56 பேர் பலியான வழக்கு 38 பேருக்கு தூக்கு தண்டனை

* 11 பேருக்கு ஆயுள் சிறை * சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்புபுதுடெல்லி: குஜராத்தில் 56 பேர் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு, ஜூலை 26ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 56 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.இந்த வெடிகுண்டு  சம்பவம் தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அரசு தரப்பு சாட்சியாக மாறினார். இறுதியாக கைது செய்யப்பட்ட 4 பேரின் மீதான நீதிமன்ற விசாரணை இதுவரை தொடங்கவில்லை. அவர்களை தவிர மற்ற 77 பேருக்கு எதிராக, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 8ம் தேதி இந்த வழக்கில் நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். அதில், 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 18ம் தேதி  அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.அதன்படி, நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தார். ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதானது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. மற்ற 11 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. மேலும், 48 குற்றவாளிகளுக்கு தலா ரூ.2.85 லட்சமும், ஒருவருக்கு ரூ.2.88 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில்  இருந்து கிடைக்கும் தொகையில், குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய காயங்கள் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும்,’ என்று நீதிபதி அறிவித்தார். முன்னதாக, தண்டனை விவரம் வழங்கப்பட இருந்ததால் சிறப்பு நீதிமன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.முதலில் விசாரித்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதி * இந்த வழக்கை மொத்தம் 9 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். 2009ல் முதன் முதலில் நீதிபதி பெலா திரிவேதி விசாரித்தார். இவருடைய காலத்தில்தான் 2005ம் ஆண்டு, பிப்ரவரி 15ம் தேதி குற்றவாளிகளின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது நீதிபதி திரிவேதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்.* தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி ஏ.ஆர்.பட்டேல், கடந்த 2017ம் ஆண்டு, ஜூன் 4ம் தேதி முதல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இப்போது டிஜிபிஅகமதாபாத் குற்றப் பிரிவு இணை போலீஸ் கமிஷனரான ஆசிஷ் பாட்டியா தலைமையிலான தனிப்படை இந்த குணடுவெடிப்பு வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்தது. தற்போது இவர், குஜராத் மாநில காவல்துறை தலைவராக (டிஜிபி) இருக்கிறார்.8 சிறைகளில் கைதிகள்இந்த வழக்கில் தொடர்புடைய 49 குற்றவாளிகளும், அகமதாபாத், டெல்லி திகார், போபால் சிறை, பீகாரில் உள்ள கயா, பெங்களூரு, கேரளா, மும்பை உட்பட 8 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள் காணொலி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.இதுவே முதல் முறைஇந்தியாவில் ஒரே வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் மற்றொரு வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.7,000 பக்க தீர்ப்புகுற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் தீர்ப்பை நீதிபதி பட்டேல் 7 ஆயிரம் பக்கங்களில் வழங்கி இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2009ம் ஆண்டு, டிசம்பரில் தொடங்கியது. 14 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு