குஜராத்தில் ரூ600 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஜின்ஜூடா கிராமத்தில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் பஷீர் பலோச் என்பவர் படகு மூலம் இந்த போதைப் பொருளை அனுப்பி உள்ளார். இவற்றை குஜராத்தை சேர்ந்த முக்தார் ஹூசைன், குலாம் உமர் ஆகியோர் பெற்றுக் கொண்டு பதுக்கி வைத்திருந்தனர்’.என்றனர். …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்