குஜராத்தில் ஒற்றுமை சிலை முன்பு பிரதமருடன் ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு

குஜராத்: குஜராத்தில் ஒற்றுமை சிலை முன்பு பிரதமருடன் ஐ.நா பொதுச் செயலாளர் சந்தித்தார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல், 2வது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார். பின்னர், குஜராத் சென்ற அவர், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநிலம் கேவாடியாவில் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்….

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்