கீழ்வேளூர் ஒன்றியம் கொள்ளிளத்தூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான மாதிரி பதிவு

 

கீழ்வேளூர்,ஜூலை 22: கீழ்வேளூர் ஒன்றியம் கொள்ளிளத்தூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான மாதிரி பதிவு நடந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த மகளிர் உரிமை தொகை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 193 ஊராட்சிகளிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆன்லைன் யில் பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவம் வழங்குவது, ஆன்லைனில் பதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கீழையூர் ஒன்றியம் வாழக்கரை, திருக்குவளை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் சந்த் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சோதனை பதிவு (டெமோ) கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் நேற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. மேலும் பயனாளியிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கோளாறுகளால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் குடும்ப தலைவிகள் தங்களது குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து , தற்காலிக பதிவு செய்து சோதனை செய்து பார்த்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் அகிலா, கிராம நிர்வாக அலுவலர் முரளி, ஊராட்சி தலைவர் ரேவதி ஐயப்பன், ஊராட்சி செயலர் சக்திவேல், கிராம உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து