கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், கீழ்மணம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைக்கு சென்று அங்கு இருந்த மாணவியர்களிடம் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர், தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அங்கு இருந்த வருகை பதிவேட்டை எடுத்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.  பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரித்து, மாணவிகள் அனைவருக்கும் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவருடன் முதன்மை கல்வி அலுவலர் ராமன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்