கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவர் டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட்

* அரசு ஊழியர் நடத்தை விதிகள் மீறல்* மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவுசென்னை: அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைவர் டாக்டர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாணவி லாவண்யா விவகாரம் தொடர்பாக அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் என்ற மாணவ அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைவர் மருத்துவர் சுப்பையா கைதானவர்களை சிறையில் நேரில் சென்று பார்வையிட்டார்.இதனால், அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக நேற்று முன்தினம் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடந்த 2017 முதல் 2020 வரை அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் தேசிய தலைவராகவும் இருந்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேலும் இவர் வீட்டிற்கு எதிர் வீட்டாருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை காரணமாக எதிர் வீட்டின் வாசலின் முன்பு சிறுநீர் கழித்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை