கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தடுத்து வாய்க்காலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் கீழ் பவானி வாய்க்காலில் இரவு நேரத்தில் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள், எந்தவிதமான உடைப்பு பழுதும் ஏற்படமால் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின் உறுதிமொழியை மீறி இரவு நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளதை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276 ரத்து செய்ய வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெருந்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, அமைச்சர் சு.முத்துாசமி பேச்சுவார்த்தை நடத்தி, கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். பணிகள் நடக்கும் இடங்களில் உள்ள விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இதன்பேரில், எங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், தற்போது அமைச்சரின் வாக்குறுதியை மீறி நல்ல நிலையில் அதிகாரிகள், கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் இருந்த மண்கரைகளை இடித்து சீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளனர். இதனை கண்டித்து தான் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்