கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும்

 

ஈரோடு, ஆக. 28: விநாயகர் சிலைகளை கீழ் பவானி வாய்க்காலில் கரைக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்கால் நீரால் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வாய்க்காலில் கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைவதாலும் மற்றும் சிலைகளுடன் எடுத்து வரும் மூங்கில்கள் உள்ளிட்ட கழிவு பொருள்களாலும் வாய்க்காலின் மதகுகளில் அடைப்புகள் ஏற்படுகிறது. மேலும், ரசாயன கழிவுகளால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

மேலும், வாய்க்காலின் கரைகள், கட்டுமானங்கள் பலவீனமாகவும் உள்ளன. எனவே, கீழ் பவானி வாய்க்காலில் விநாயகர் சிலைகள் கரைப்பதை தடுக்க காவல்துறை மூலமாக வாய்க்காலுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்