கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

 

மஞ்சூர்: குடிநீர் ஆதராங்களை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதென கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். இதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பேரூராட்சிகுட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் அத்தியாவசியத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து குடிநீர் ஆதாரங்களையும் பராமரிக்க நடவடிக்கை எடுப்பது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை