கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

கீழ்வேளூர்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பள்ளி, விழுந்தமாவடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை உதவி இயக்குனர் (தணிக்கை) மோகனசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வெற்றிச்செல்வன் பார்வையிட்டனர். இதேபோல திருக்குவளை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் தலைமையிலும், எட்டுக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லேகா காரல்மார்க்ஸ் தலைமையிலும் கீழையூரில் ஊராட்சித்தலைவர் ஆனந்த ஜோதி பால்ராஜ் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்வது, பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டு கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு