கீழையூர் அடுத்த மேலஈசனூர் புனித செபஸ்தியார் ஆலய பொன்விழா தேர்பவனி

 

கீழ்வேளூர்,ஜூன்7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த மேலஈசனூர் புனித செபஸ்தியார் ஆலய 50ம் ஆண்டு (பொன்விழா) மின் அலங்கார தேர்பவனி திருவிழா நடைபெற்றது.
மேலஈசனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

கோயில் பங்கு தந்தை டேவிட்செல்வகுமார் புனிதம் செய்து தேர் பவனியை தொடஙகி வைத்தார். செபஸ்தியர், மாதா, சம்மனசு ஆகிய செருபங்கள் தனித்தனியே தேர் வீதிஉலா காட்சி நடைபெற்றது. தேர் திருவிழாவில் ஜான்பிரிட்டோ, டோமினிக்சாவியோ உள்ளிட்ட ஏராளமானோர் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். 50ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கோயில் மின் அலங்காரம் செய்யப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு