கீழமணக்குடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 லட்சம் பருத்தி ஏலம்

 

திருவிடைமருதூர், ஜூலை 21: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே கீழமணக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 760 குவிண்டால் பருத்தி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஏலத்திற்கு விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 480 லாட் பருத்தி கொண்டு வந்தனர். சராசரியாக 760 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. கும்பகோணம், பண்ருட்டி, சேலம், திருப்பூர், விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.50 லட்சம். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6699, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5609, சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6431 என விலை நிர்ணயம் செய்தனர். இதற்கான தொகை விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ் முறையில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரங்களைவிட பருத்தி விலை சற்று உயர்ந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை