கீழடி அகழாய்வு தளம் செல்லும் வழியில் உள்ள சுற்றுலா விளம்பர பலகையில் தமிழ் அடியோடு புறக்கணிப்பு: சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

திருப்புவனம்:கீழடி அகழாய்வு தளம் செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் தமிழ் மொழியை  முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015 முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. மதுரை – ராமநாதபுரம் நான்கு  வழிச்சாலையில் மதுரையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் கீழடிக்கு பாதை பிரிகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் இந்த இடத்தில் பெரிய விளம்பர  பலகை வைக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு தளம், அருங்காட்சியகம் செல்லும் வழி என குறிப்பிடப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்  தலங்கள் குறித்த அறிவிப்பும் இதில் உள்ளது. ஆனால் அனைத்துமே ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக தமிழகத்தில் தமிழ்,  ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் எழுதுவது வழக்கம். இங்கு ஆங்கிலத்தில் மட்டும் விளம்பர பலகையை தமிழக சுற்றுலாத்துறை வைத்துள்ளது.கீழடியில் இருந்து 5 கிமீ தூரத்தில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அதுகுறித்த எந்த விபரமும் இதில்  இல்லை. மேலும் விளம்பர பலகை வைப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் தினசரி கீழடி அகழாய்வை பொதுமக்கள் காண வரும் நிலையில் ஆங்கிலத்தில் மட்டும் தமிழக அரசு வைத்திருப்பது  வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

Related posts

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்