கீழடி அகழாய்வில் சேதமடையாத செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்: கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

மானாமதுரை: கீழடி அகழாய்வில் கடந்த 2ம் தேதி கண்டறியப்பட்ட செங்கல் சுவற்றில் தொடர்ச்சியை கண்டறிய கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் ஏழு குழிகள் அகரம் கொந்தகையில் தலா நான்கு குழிகள் தோண்டப்பட்டன. கீழடியில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நீள் வடிவ தாயக்கட்டை, பானைகள், சாயக்கிண்ணங்கள், இரு வண்ணக் கிண்ணம் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன. இதில் கடந்த 2ம் தேதி சேதம் அடையாத செங்கற்களால் நேர்த்தியாக கட்டப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட சுவற்றின் ஒரு பகுதி கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியை கண்டறிய கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடங்கியது. இதுவரை 2,5 மற்றும் 6ஆம் கட்டங்களில் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. தற்போது 8ஆம் கட்ட அகழாய்வில் நேர்த்தியாக கட்டப்பட்ட சிதிலமடையாத 3 அடுக்கு சுவர் வெளிப்பட்டுள்ளது. இது முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அகழாய்வில் முக்கிய ஆதாரமாக கொள்ளப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்….

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு