கீழக்கரை தாலுகா துணை வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடை மாற்றம்

கீழக்கரை, ஜூலை 7: கீழக்கரை தாலுகா துணை வட்டாட்சியர்கள் 4 பேரை பணியிடை மாற்றம் செய்து ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.இதன்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் பதிலாக ஜமால் முஹமது ஜூன் 20ல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் பிறப்பித்த உத்தரவின் பேரில் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவனுக்கு பதிலாக அய்யா துரை, கீழக்கரை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரத்திற்கு பதிலாக சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் ராம மூர்த்திக்கு பதிலாக சாமுண்டீஸ்வரி, கீழக்கரை தேர்தல் பிரிவு தாசில்தார் சந்திரனுக்கு பதிலாக காசிநாதன் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை