கீராளத்தூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 22: தமிழ்நாடு அரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின் கீழ் 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ உத்தரவின் பேரில் கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி, உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் வழிகாட்டுதலின்படி கீராளத்தூர் ஊராட்சியில் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் சந்திரன், காவியா, ஆய்வாளர் சாந்தி, பாரமரிப்பு உதவியாளர்கள் சுபாஷ் சந்திரன், மீனா ரீகன் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினர் 150 மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு கோமாரி நோயின் பொருளாதார இழப்புகள் குறித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு விளக்கப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு