கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி கூட்டம்

 

சேலம், டிச.11: சேலம் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. வாழப்பாடி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கோகுல் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மருத்துவரணியின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டது. தொடர்ந்து 24ம்தேதி நடக்கும் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள் நடத்தி உதவிகள் செய்யவேண்டும். அனைத்து பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவ அணி சார்பில் நீட்தேர்வுக்கு எதிராக மருத்துவரணி நடத்திய கையெழுத்து இயக்க தபால் அட்டைகளை மாவட்ட செயலாளர் சிவலிங்கத்திடம் மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கோகுல் வழங்கினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, துணைசெயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் மருத்துவரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு