கிளாம்பாக்கம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

 

திருவள்ளூர், பிப். 19: திருவள்ளூர் ஒன்றியம், 78 கிளாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறைககள் கொண்டு கூடுதல் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றியசெயலாளர் ஜெயசீலன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி வட்டார கல்வி அலுவலர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், நிர்வாகிகள் தரணி சீனிவாசன், சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள் முனுசாமி, ஸ்ரீதர், விமல், மணி, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி, விக்ரமன், சுரேஷ் மற்றும் சிவப்பிரகாஷ், சூரியபிரபு, முருகன் கோட்டீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை