Sunday, June 30, 2024
Home » கிளர்ச்சியூட்டும் எஸ்யுவி வாழ்க்கையை இன்னும் மேம்படுத்தும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா; ஹுண்டாய் வென்யூ N Line முன்பதிவுகள் இப்போது ஆரம்பம்!

கிளர்ச்சியூட்டும் எஸ்யுவி வாழ்க்கையை இன்னும் மேம்படுத்தும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா; ஹுண்டாய் வென்யூ N Line முன்பதிவுகள் இப்போது ஆரம்பம்!

by kannappan

டெல்லி: இந்தியாவில் N Line மாடல்களை அறிமுகம் செய்வதில் ஹுண்டாய் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை நிரூபிக்கும் வகையில், ஹுண்டாய் – ன் புதிய மாடல் தொகுப்பில் முதல் எஸ்யுவி ஆக ஹுண்டாய் N Line அறிமுகமாகிறது. மோட்டார் பந்தய விளையாட்டால் உத்வேகம் பெற்ற ஸ்டைலிங் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் N Line, முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் ஸ்போர்ட்டியான சவாரியையும், சிறப்பான டிரைவிங் அனுபவத்திற்காக எளிதான கையாளல் திறனையும் வழங்குகிறது. நம்பிக்கையான மற்றும் மகிழ்ச்சியான டிரைவிங் அனுபவத்திற்காக 20+ ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக வெளிவரும் ஹுண்டாய் N Line – ல் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களின் பெருமகிழ்ச்சியை உறுதிசெய்யும் வகையில் இரட்டை கேமராவுடன் கூடிய தனிச்சிறப்பான டேஷ்கேம்-ஐயும் ஹுண்டாய் N Line வழங்குகிறது. ஹுண்டாய் N Line – ல் இடம்பெறுகின்ற 60-க்கும் கூடுதலான ஹுண்டாய் ப்ளுலிங்க் கனெக்டட் கார் அம்சங்கள், இப்பிரிவில் மிக அதிக எண்ணிக்கையில் இணைப்பு வசதியுள்ள காம்பேக்ட் எஸ்யுவி ஆக இதனை ஆக்குகின்றன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், அதன் ஸ்போர்ட்டியான, கிளர்ச்சியூட்டுகின்ற ஹுண்டாய் N Line காருக்கான முன்பதிவு செயல்பாட்டை இன்று தொடங்கியிருக்கிறது. ஹுண்டாயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் DNA – இடமிருந்து வலுவான வடிவமைப்பு ஆற்றலிலிருந்து உத்வேகம் பெற்றிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line, உயிரோட்டமான, ஸ்போர்ட்டியான டிரைவிங் அனுபவங்களோடு அற்புதமான ஸ்டைலையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.21000 என்ற முன்பண தொகையுடன் https://clicktobuy.hyundai.co.in என்ற ஹுண்டாய் க்ளிக் டு பை செயல்தளத்தில் ஆன்லைனில் அல்லது நாடெங்கிலும் உள்ள ஹுண்டாய் சிக்னேச்சர் அவுட்லெட்களில் ஹுண்டாய் வென்யூ N Line காரை இப்போது முன்பதிவு செய்யலாம். ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. உன்சூ கிம், ஹுண்டாய் வென்யூ N Line – க்கான முன்பதிவுகள் தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “எமது ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளின் வழியாக நவீன ஸ்போர்ட்டியான மற்றும் கிளர்ச்சியூட்டுகின்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் எமது பேரன்புக்குரிய வாடிக்கையாளர்களின் கனவுகளையும், விருப்பங்களையும் நனவாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் ஆட்டோமோட்டிவ் செயற்பிரிவின் மேம்பட்ட உருமாற்றம் என்ற இலக்கை நோக்கிய எமது தீவிர செயல்நடவடிக்கையின் மற்றொரு எடுத்துக்காட்டாக ஹுண்டாய் வென்யூ N Line அறிமுகம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனராக வாடிக்கையாளரது பெருமகிழ்ச்சியை மேம்படுத்துவது மீது நாங்கள் தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம்; இந்த சமீபத்திய எஸ்யுவி மூலம் இந்தியாவில் N Line அணிவரிசையின் வலுவான பாரம்பரியத்தை நிலைநாட்டுவதை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். 2021-ம் ஆண்டில் இக்கார் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மிலெனியல்ஸ் மற்றும் ஜென் Z வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய இந்தியாவின் உற்சாகம் மிக்க சமூகத்தின் மிக வலுவான வரவேற்பை ஹுண்டாய் i20 N Line ஏற்கனவே பெற்றிருக்கிறது; இப்போது ஹுண்டாய் வென்யூ N Line அறிமுகத்தின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கேளிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்த எஸ்யுவி டிரைவிங் அனுபவத்தை மேலும் நாங்கள் உயர்த்தவிருக்கிறோம்.இதன்மூலம் இந்தியாவில் இந்த சிறந்த, வலுவான பாரம்பரியத்தை நாங்கள் மேலும் நிலைநாட்டுவோம்.” ஸ்போர்ட்டியான சவாலின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான டிரைவிங் அனுபவத்தை ஹுண்டாய் வென்யூ N Line வழங்கும். இந்த சிறப்பான எஸ்யுவி டிரைவிங் அனுபவத்திற்கு நேர்த்தியான சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டியரிங் டியூனிங் மூலம் பெறப்படும் கையாளல் சிறந்த பங்களிப்பைத் தரும். கார் ஆர்வலரின் டிரைவிங் அனுபவத்தை மேலும் செழுமையாக்குகிற ஒரு ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட் நோட், டிரைவிங் த்ரில்லை மேலும் மேம்படுத்தும். 4-டிஸ்க் பிரேக்குகளை கொண்டிருக்கும் இந்த ஸ்போர்ட்டியான எஸ்யுவி, நம்பிக்கையுடன் வாகனத்தை ஓட்டும் அனுபவத்தை வழங்குவதற்கு முழுமையான திறன்களை கொண்டிருக்கிறது. இதன் ஸ்போர்ட்டியான வடிவமைப்பை இன்னும் நேர்த்தியாக்குகிறவாறு ஹுண்டாய் வென்யூ N Line, கீழ்க்கண்ட பிரத்யேக N Line ஸ்டைலிங் அம்சங்களையும் வழங்கும்: Dark Chrome Front GrilleSporty Tailgate SpoilerN Line Emblem on Dark Chrome Front Grille, Side Fenders (Left & Right), TailgateR16 (D=405.6 mm) Diamond Cut Alloys with N Branding (N Line exclusive design)Athletic Red Highlights on exteriors (Bumper, Fender, Side Sill, Roof Rails) Sporty Black Interiors with Athletic Red InsertsFront Red Brake Caliperஇரட்டை கேமராவுடன் கூடிய தனிச்சிறப்பான டேஷ்கேமை கொண்டிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line வழியாக வாடிக்கையாளர்கள் இப்போது, கிளர்ச்சியூட்டுகின்ற டிரைவிங் அனுபவங்களை தன்வசமாக்கிக் கொள்ளலாம். 60-க்கும் அதிகமான ஹுண்டாய் ப்ளுலிங்க் கனெக்டட் கார் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் வென்யூ N Line, ஸ்மார்ட் மொபிலிட்டி அனுபவங்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் திறனுள்ளதாக இருக்கிறது. இப்பிரிவில் மிக அதிக கனெக்டட் அம்சங்கள் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி என்ற பெருமையை இது பெறுகிறது. அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் வழியாக ஹோம் டு கார் (H2C) அம்சத்தையும் ஹுண்டாய் வென்யூ N Line கொண்டிருக்கிறது. ஸ்போர்ட்டியான, உத்வேகமளிக்கும் டிரைவிங் அனுபவத்தோடு சேர்த்து பன்முகத்திறனுள்ள டிரைவிங் செயல்திறனை வழங்குகின்ற டிரைவ் மோட் செலக்ட் வசதியையும் வென்யூ N Line வழங்கும். நார்மல், எக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளில் விரும்பியதை தேர்வுசெய்து கொள்ளலாம். 1.0 கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் மற்றும் பவர்ட்ரெய்ன் உடன் 2வது ஜென் 7 – வேக DCT உடன் ஹுண்டாய் வென்யூ N Line கிடைக்கிறது. 88.3 கி.வா. (120 PS) என்ற அதிகபட்ச ஆற்றலையும், 172 Nm என்ற அதிகபட்ச இழுவை சக்தியையும் இது வழங்குகிறது. 30-க்கும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 2010 ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டிருப்பதால், த்ரில்லிங்கான, மகிழ்ச்சியான அனுபவத்தோடு, நம்பிக்கையான, பாதுகாப்பான அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுவது நிச்சயம். ஹுண்டாய் வென்யூ N லைனில் இடம்பெறுகின்ற ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்களுள் கீழ்க்கண்டவையும் உள்ளடங்கும்: Vehicle Stability Management (VSM)Hill Assist Control (HAC)Dual AirbagsElectronic Stability Control (ESC)All 4 Disc BrakesISOFIXABS with EBDBrake Assist System Parking Assist Sensors and Camera with Dynamic GuidelinesHeadlamp Escort FunctionHMIL குறித்துஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) என்பது ஹுண்டாய் மோட்டார் கம்பெனிக்கு (HMC) முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கார் ஏற்றுமதியில் முதலிடத்தை வகித்து வரும் ஹுண்டாய், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. தற்போது கிராண்டு i10 நியோஸ், ஆல் நியூ i20, i20 N Line, ஆரா, வென்யூ, ஸ்பிரிட்டட் நியூ வெர்னா, ஆல் நியூ கிரேட்டா, அல்கஸார், நியூ டக்ஸன் மற்றும் கோனா எலக்ட்ரிக் என்ற 10 மாடல்களில் கார்களை தயாரித்து இது வழங்கி வருகிறது. சென்னை அருகே உள்ள HMIL-ன் ஒருங்கிணைந்த அதிநவீன தயாரிப்பு தொழிற்சாலையில் அதிநவீன உற்பத்தி, தர மற்றும் பரிசோதனை வசதிகள் உள்ளன. HMC-ன் உலக ஏற்றுமதி மையத்தின் முக்கிய அங்கமாக HMIL விளங்குகிறது. இது தற்போது ஆப்பிரிக்கா, மத்தியகிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பசிபிக் என ஏறக்குறைய 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தனது வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி திட்டங்களுக்கு உதவும் வகையில் ர்ஆஐடு-க்கு தற்போது இந்தியா முழுவதும் 567 டீலர்களும் மற்றும் 1439 சேவை மையங்களும் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உலக தொழில்நுட்பத்தை கொடுக்க வேண்டும் என்ற தனது உறுதிபாட்டில், ஹுண்டாய்-க்கு, ஒரு பல மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு R&D மையம், மோட்டார்வாகனப் பொறியியல் துறையில் உயர்நேர்த்தி மையமாக விளங்குவதற்கு உறுதிகொண்டுள்ளது….

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi