கிறிஸ்துமஸ் விடுமுறை எதிரொலி களை கட்டிய ஊட்டி சுற்றுலா தலங்கள்-ஓட்டல், காட்டேஜ்கள் நிரம்பின

ஊட்டி : கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை என 2 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களை கட்டின.சுற்றுலா  நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில்  இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும்  தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு  விடுமுறைகளின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு  அதிகரிக்கிறது. தற்போது உறைப்பனி பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில்,  கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சனி வார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் என 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்த நிலையில், இந்த  விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதலே  ஊட்டிக்கு வர துவங்கினர். கடந்த இரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா  பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா  மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  காணப்பட்டது. ஊட்டி மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு  இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள்  கூட்டத்தால் களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு  காரணமாக நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூடலூர்  சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  நேற்று பகலில் இதமான  காலநிலை நிலவியதால் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய  சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். சுற்றுலா பயணிகள் வருகை  காரணமாக ஊட்டி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், காட்டேஜ்கள் நிரம்பின.  சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்