கிரைம் செய்திகள் கொலை வழக்கு சாட்சியை மிரட்டியவர் கைது

கோவை, ஜூன் 18: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சூர்யா (33). இவரது நண்பர் சேகர் (29). இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு உக்கடம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் பிஎன் புதூர் ரங்கே கவுண்டர் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (38) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இருவருக்கும் எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லி வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சூர்யாவுக்கும், பிரகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சூர்யா தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என பிரகாசை தொடர்ந்து மிரட்டி வந்தார். இந்நிலையில், பிரகாஷ் உக்கடம் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சூர்யா மற்றும் சேகர் ஆகியோர் மீண்டும் அவரை மிரட்டினர். வாக்குவாதம் முற்றியதில் இருவரும் கத்தியை காட்டி தங்களுக்கு எதிராக செயல்பட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து பிரகாஷ் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாட்சியை மிரட்டிய சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சேகர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்