கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல்

திருவிடைமருதூர், ஆக. 17: திருவிடைமருதூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையம் தனியார் வாடகை இடத்தில் செயல்பட்டு வந்தது. எனவே நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இந்த நெல் கொள்முதல் நிலையம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 3550 சதுர அடியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட உள்ளதாக நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுமான பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related posts

ஆடி திருவிழாவில் பாரி ஊர்வலம்

முழுமையான பணமில்லா சிகிச்சை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்