கிருஷ்ணராயபுரம் ஊராட்சியில்அங்கன்வாடிமைய கட்டிடங்கள் திறப்பு

 

கிருஷ்ணராயபுரம். பிப்.10: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியல் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வயலூர் ஊராட்சியில் உள்ள சரவணபுரத்தில் ரூ.11.97 லட்சம் மதிப்பிலும், சிந்தலவாடி ஊராட்சியில் உள்ள பாலப்பட்டியில் ரூ.11.97 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை குளித்தலை எம்எல்ஏ.மாணிக்கம் திறந்துவைத்தார். கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன்.

சுமித்ரா தேவி தலைமை வகித்தார். இதேபோல் சிந்தலவாடி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை எம்எல்ஏ. மாணிக்கம் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்.கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள். ரேவதி (வயலூர் ஊராட்சி) சக்திவேல் (கள்ளபள்ளி ஊராட்சி) ஒன்றிய கவுன்சிலர்கள். பாலசுப்ரமணியன், கோபால் புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். விஜயகுமாரி, கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை