கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி தற்கொலை

 

கிருஷ்ணராயபுரம். மே 28: கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கீழதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). பூ வியாபாரி. இவர் தனது வீடு பராமரிப்பு செய்வதற்காக வங்கி மற்றும் தனி நபரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பூச்செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக முசிறி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்க ப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் மனைவி நதியா (21) கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு