கிருஷ்ணராயபுரம் அருகே ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய மாணவ, மாணவிகள்

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 2: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை.அனிதா தலைமையில் பேரூராட்சி தலைவர். சௌந்தரப்பிரியா, வட்டார கல்வி அலுவலர். செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி ஆசிரியர். ஞானசுந்தரம் வரவேற்றார்.

விழாவில் கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு