கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒமைக்ரான் கொரோனாவை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தாத 10,86,500 பேர் பொது இடங்களாக உள்ள 18 இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தியை காண்பிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடையை மீறி பொது இடத்துக்கு வந்தால் அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு