கிருமித் தொற்றை ஒழிக்கும் கல்ஹார உற்சவம்

அந்தக் காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் கொள்ளை நோய்கள், போர்களை தவிர்க்கவும் கோயில்களில் சில உற்சவங்களை நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு உற்சவம்தான் கல்ஹார உற்சவம். திருமாலின் திருத்தலங்களில் பூஜை செய்யும் முறைகளை விளக்கும் பாஞ்சராத்திர ஆகமத்தின் ஸ்ரீபிரச்ன சம்ஹிதை என்ற பகுதியின் 48ம் அத்தியாயம் கல்ஹார உற்சவம் என்ற ஒரு உற்சவத்தைப் பற்றிச் சொல்கிறது. பிரம்மோற்சவம், தெப்ப உற்சவம், தேரோட்ட உற்சவம், கல்யாண உற்சவம், வேடுபரி உற்சவம் எனப் பற்பல உற்சவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அது என்ன கல்ஹார உற்சவம்?கல்ஹார உற்சவம் என்றால் என்ன?‘கல்ஹாரம்’ என்று வெள்ளை அல்லிக்குப் பெயர். வெள்ளை அல்லிப் பூக்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்யும் உற்சவம் என்பதால் இது கல்ஹார உற்சவம் என்றழைக்கப்படுகிறது.இதை எப்போது செய்ய வேண்டும்?பரசக்ர ப்ரவேசே அபி சத்ருபி: பீடிதே து வாமஹாமாரிகயா பூமௌ ஸர்வஸ்மின் ஜன நாசனேமஹோத்பாதாதிபி: லோகே பீடிதே வா க்ரஹாதிபி:ததா புவம் பூஜயித்வா கல்ஹார உத்ஸவம் ஆசரேத்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-2,3)1.எதிர் நாட்டு சேனை நம் தேசத்துள் நுழைந்து விட்டாலோ,2.எதிரிகள் நம் தேசத்தைப் பிடித்துக் கொண்டாலோ,3.வைரஸ் போன்ற கிருமித் தொற்று அதிக அளவில் ஏற்பட்டு மக்களுக்குப் பெரும் அழிவு நேர்ந்தாலோ,4.இயற்கைச் சீற்றங்கள் உண்டானாலோ, கிரகப் பீடைகள் ஏற்பட்டாலோ,பூமி பூஜை செய்து கல்ஹார உற்சவத்தைச் செய்ய வேண்டும்.ரிது ராஜே வஸந்தே வா ததா சரதி வா ரமேஜ்யேஷ்டே வா ச்ரவணே மாஸே புஷ்யே வா                        பல்குனேபி வாபூர்வபக்ஷே ச பஞ்சம்யாம் த்வாதச்யாம் பூர்வயோ: அபிரோஹிணீ ச்ரவண அச்வின்யோ: உத்தர த்ரிதயே                         அபி வா(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-6,7)வசந்த காலத்திலோ, இலையுதிர்க் காலத்திலோ இந்த உற்சவத்தைச் செய்யலாம்.ஆனி, ஆவணி, தை, பங்குனி ஆகிய நான்கு மாதங்களுள் ஒன்றில் செய்யலாம்.வளர்பிறை பஞ்சமி திதியிலோ, துவாதசி திதியிலோ செய்யலாம்.ரோகிணி, திருவோணம், அச்வினி, உத்தரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் செய்யலாம்.இதை எவ்வாறு செய்ய வேண்டும்?ஊரில் உற்சவம் தொடங்கும் நாளை ஒட்டிக் கொடியேற்றம் நடைபெறும். கொடி ஏற்றிக் காப்பு கட்டிவிட்டால் அதன்பின் அவ்வூரைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியூர்களுக்குச் செல்ல மாட்டார்கள். வெளியூர் நபர்களும் ஊருக்குள் வர மாட்டார்கள். இது ஒரு விதமான குவாரண்டைன்.ஹஸ்தமானம் ம்ருதம் காத்வா நகரே ஸர்வ வீதிஷுகாத ம்ருத்ஸாம் பஹி: நீத்வா தேஷு ஸைகத                           ம்ருத்ஸ்னயாஸம்பூர்ய ச ஸமீக்ருத்ய குசாத்பி: ப்லாவயேத் தத:(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-9,10)எந்த நகரில் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதோ, அந்த நகரில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் ஒரு சிறு குழியை நோண்டி, கையளவு மண்ணை எடுக்க வேண்டும். அதன் பின் அந்த இடத்தில், பொடியான களிமண், தர்ப்பைப் புல், மரக்கட்டை ஆகியவற்றை இட்டு அதை நிரப்பவேண்டும்.ஸுதாபி: லேபயேத் க்ராம வேச்மனாம் பித்திஷு க்ரமாத்தோரணை: கேது மாலாபி: பதாகாபி: அலங்க்ரியாத்சந்தன அகரு கஸ்தூரி நிர்யாஸ ப்ரவரை: ததாதூபயேத் ஸர்வதோ தூபை: வாஸயேத் ஸர்வ வீதிகா:(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-11,12)அனைத்து வீடுகளின் சுவர்களையும் நன்கு கழுவி விட்டு, அதன்பின் தேன் அல்லது பழச்சாற்றால் அவற்றை அலங்கரிக்க வேண்டும். மேலும், தோரணங்கள், கொடிகள், மாலைகள், பதாகைகள் ஆகியவற்றால் வீடுகளை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறே சந்தனம், அகர், கஸ்தூரி, பழச்சாறு போன்ற வாசனை திரவியங்களை வீட்டில் தெளிக்க வேண்டும். ஊரிலுள்ள அனைத்து வீதிகளிலும் சாம்பிராணிப் புகை நிறையும்படி அனைத்து திசைகளிலும் சாம்பிராணி போட வேண்டும்.இறைவனிடம் பிரார்த்தனை:உத்ஸவ உபக்ரமாத் பூர்வம் நவமே ஸப்தமே அஹ்னி வாத்ருதீயே அஹனி ஸத்யோ வா மங்கல அங்குர ஸித்தயேதேசிகோ நித்ய பூஜாதீன் க்ருத்வா ஸம்ப்ரார்த்தயேத்                              ஹரிம்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-13,14)இந்த உற்சவத்தை ஒன்பது, ஏழு அல்லது மூன்று நாட்களுக்கு நடத்துவார்கள். உற்சவக் காலத்தில் தினந்தோறும் இறைவனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும்.மஹீபதே! ஜகந்நாத! கல்ஹார குஸுமோத்ஸவம்கரோமி தவ தேவேச! தத் அநுஜ்ஞாதும் அர்ஹஸி(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-15)“பூமியின் தலைவனே! உலகின் நாதனே! உனக்குக் கல்ஹார உற்சவம் செய்கிறேன்! இதை நீ கருணையோடு ஏற்றருள வேண்டும்!” என்று அர்ச்சகர் பிரார்த்தனை செய்து உற்சவத்தைத் தொடங்க வேண்டும்.முக்கியச் செய்முறையின் சுருக்கம்:ப்ரபாம் க்ருத்வா தஸ்ய மத்யே கல்பயேத் வேதிம்                             உன்னதாம்கோமய ஆலேபனம் க்ருத்வா ஸூதா சூர்ணை:                            விசித்ரயேத்புண்யாஹவாரிணா ப்ரோக்ஷ்ய தஸ்மின் பீடம்                            ப்ரகல்பயேத்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-17,18)பந்தல் அமைத்து, அதில் வேள்விச் சாலை அமைத்து, அவ்விடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, வாசனை திரவியங்களை அதில் தெளித்து, மந்திரத்தால் தூய்மையாக்கப்பட்ட தண்ணீரை அவ்விடத்தில் தெளித்து ஒரு பீடத்தை உருவாக்க வேண்டும்.தேவி த்வத் ஹஸ்த கல்ஹார குஸுமை:                     அர்ச்சயேத் விபும்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-26)அந்தப் பீடத்தில் எட்டு கும்பங்களை வைத்து, பூமி தேவியைப் பிரார்த்தித்து, கல்ஹாரம் என்றழைக்கப்படும் வெள்ளை அல்லிப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.காரயேத் விவிதா மாலா: தத் தத் பிம்ப அநுஸாரத:ஸ்வர்ண பாத்ரே விநிக்ஷிப்ய பரிசாரக மூர்த்தனிநிதாய தூர்யகோஷேண குர்யாத் க்ராம ப்ரதக்ஷிணம்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-31,32)ஐம்பது வெள்ளை அல்லிப் பூக்கள் (கல்ஹாரப் பூக்கள்) கொண்ட மாலைகளைத் தொடுத்து, அவற்றைத் தங்கப் பாத்திரத்தில் வைத்து, அதை ஒருவர் தலையில் ஏந்தியபடி வாத்திய கோஷங்களுடன் நகரம் முழுக்க வலம் வர வேண்டும். வலம் வந்தபின் அந்த வெள்ளை அல்லி மாலைகளைத் திருமாலுக்கும் திருமகளுக்கும் அணிவித்து, வெள்ளை அல்லிப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.ஸம்ஸ்தாப்ய மண்டபே தேவம் கல்ஹார குஸுமை: யுதேஆராத்ய பாயஸ அன்னாதி க்ஷப்யாணி ச நிவேதயேத்ஆசார்ய பாகம் க்ருஹ்ணீயாத் பக்தேப்ய: அபி ச                         தாபயேத்பீடே தேவம் ஸமாரோப்ய வீதீ ப்ரமணம் ஆசரேத்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-41,42)பாயசம் செய்து திருமாலுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதன்பின் அனைத்து வீதிகளிலும் உற்சவரை எழுந்தருளப் பண்ணி வலம் வர வேண்டும். இவ்வாறு ஒன்பது, ஏழு, ஐந்து அல்லது மூன்று நாட்களுக்குச் செய்ய வேண்டும்.தீர்த்தவாரி:யதாவத் உத்ஸவம் க்ருத்வா குர்யாத் அவப்ருதம் குரு:கும்ப மண்டல வஹ்னிஸ்தாம் சக்திம் மூலே                           நியோஜயேத்(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-44)இவ்வாறு உற்சவத்தைச் செய்து, நிறைவு நாளில் தீர்த்தவாரி நடத்தி நிறைவு செய்ய வேண்டும். அதன்பின் கொடியிறக்கம் நடைபெறும்.இந்த உற்சவத்தின் பலன் என்ன?ராஜா பூமிம் அவாப்னோதி ஹன்யந்தே சத்ரவ: ததாநச்யந்தி வ்யாதய: சைவ ஸம்ப்ராப்னோதி                       அதிகம் ஸுகம்ப்ரஜா விந்தந்தி நிதராம் தீர்கம் ஆயு: ப்ரஜா புவி(ஸ்ரீபிரச்ன சம்ஹிதை 48-4,5)இந்த உற்சவத்தைக் கோயிலில் செய்தால்,மன்னர் எதிரிகளை வென்று நாட்டைக் காப்பாற்றுவார்.நாட்டிலுள்ள வியாதிகள் அனைத்தும் அழியும்.மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியையும் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.- குடந்தை உ.வே. வெங்கடேஷ்…

Related posts

மகாளய பட்ச அமாவாசை சிறப்பு அம்சங்கள்

கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்

குலசேகராழ்வார் அருளிய முகுந்த மாலை