கிராம முன்னேற்ற குழு கூட்டப்பயிற்சி

காரிமங்கலம், ஜூன் 23: காரிமங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், கும்பாரஅள்ளி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி மேற்பார்வையில், கிராம முன்னேற்ற குழு கூட்டப்பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சியில் வேளாண் அலுவலர் உதயபாரதி, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம முன்னேற்ற குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், காரீப் பருவ பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் மலர்விழி, வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவி, உழவன் செயலின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் பெரியசாமி, ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி