கிராம மக்கள் கோரிக்கை; கந்தர்வகோட்டை அருகே கொத்தகப்பட்டியில் உலக சிறுநீரக தினம் கடைபிடிப்பு

 

கந்தர்வகோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிற்கு தலைமை ஆசிரியர் (பொ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் சுகன்யா அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் யோகேஸ்வரன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு அரசு மாதிரி பள்ளியில் சேர்வதற்கு தேர்வு பெற்றுள்ளதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தார்.அப்போது உலக சிறுநீரக தினம் குறித்து பேசும்போது, உலக சிறுநீரக தினம் என்பது 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும், இது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒன்றிணைத்து அற்புதமான சிறுநீரகங்கள்பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அவர்களின் பங்கை மக்களுக்கு உணர்த்துகிறது. இந்த ஆண்டு 2024 உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருள் அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் பராமரிப்பு மற்றும் உகந்த மருந்துப் பயிற்சிக்கான சமமான அணுகலை மேம்படுத்துதல் ஆகும். சிறுநீரக நோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொருத்தமான சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். சிறப்பாசிரியர் அறிவழகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தற்காலிக ஆசிரியர் தசாதீபன் நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை